ஐடி ரீபண்ட் காலம் 16 நாட்களாக குறைந்தது

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபின்பு ரீபண்ட் கிடைப்பதற்கான காலம் சராசரியாக 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் நிதின் குப்தா தெரிவித்தார். இதுகுறித்து ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் குப்தா நேற்று கூறுகையில்,‘‘ வருமான வரி ரீட்டர்ன்களை பரிசீலனை செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்த பின்பு ரீபண்ட் கிடைப்பதற்கான காலம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்த பின்பு ரீபண்டிற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. தற்போது வருமான வரி ரிட்டர்ன் பரிசீலனைக்கு சராசரியாக 16 நாட்கள் ஆகிறது. கடந்த 2021-22 நிதியாண்டில் இது 26 நாட்கள் ஆக இருந்தது. ரிட்டர்ன் தாக்கல் செய்த 80 சதவீத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களிலேயே ரீபண்ட் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

The post ஐடி ரீபண்ட் காலம் 16 நாட்களாக குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: