வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை வேகமாக நிரம்பி வருவதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கே.ஆர்.பி. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும் (1666.26 மில்லியன் கனஅடி). மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் உபரிநீர் முழுவதும் அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

The post வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: