கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடியில் கழிப்பறை கட்டும் பணிகள் தீவிரம்: பெண்கள் கழிப்பறை புதுப்பிப்பு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் தானிய மார்க்கெட்டுகளுக்கு தினமும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். லட்சக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்லும் மார்க்கெட்டில் 54 கழிப்பறைகள் செயல்பட்டு வந்தது. பெண்கள் கழிப்பறைகள் குறைவாக இருந்ததால் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, பெண் வியாபாரிகள், அங்காடி நிர்வாகத்திடம், ‘‘பெண்களுக்கு தனி கழிப்பறை கட்டித்தர வேண்டும்’’ என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்று அங்காடி நிர்வாக சார்பில் பெண்களுக்கு தனி கழிப்பறை கட்டும் பணி 4 பிரிவின் கீழ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அங்காடி நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடி மதிப்பில் கழிப்பறைகள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு 46 கழிப்பறையும், ஆண்களுக்கு 54 கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு வாரத்தில் முடியும் நிலையில் உள்ளது. பணிகள் முழுமையாக முடிந்தபிறகு பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,’’ என்றனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடியில் கழிப்பறை கட்டும் பணிகள் தீவிரம்: பெண்கள் கழிப்பறை புதுப்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: