கர்நாடகாவில் விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் உயிர் தப்பினர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இந்திய விமானப் படையின் கிரண் ரக பயிற்சி விமானம் பெங்களூரு விமானப்படை மைதானத்தில் இருந்து வானில் பறந்தது. இதை பெண் விமானி உள்பட இருவர் இயக்கி வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

இந்த விமானம் சாம்ராஜ்நகர் போகபுரா கிராமம் அருகே வந்த போது திடீரென விபத்துக்குள்ளானது. அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. உடனே விமானத்திலிருந்த பெண் விமானி உட்பட இரு விமானிகளும் அதிலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானம் விழுந்து தீப்பற்றி புகைமூட்டமாக அப்பகுதி காணப்பட்டதால் கிராம மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கர்நாடகாவில் விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: