ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரம் இலவசம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் நோக்கில் முதல்வர் அசோக் கெலாட் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி, ‘ராஜஸ்தான் மாநிலத்தில் வீடுகளில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதே போல் 100 யூனிட்டுக்கு கூடுதலாக பயன்படுத்துவோர் முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை’ என்று அதிரடி அறிவிப்பை நேற்று வௌியிட்டார்.

இதுகுறித்து பாஜ எம்எல்ஏவும், செய்தி தொடர்பாளருமான ராம்லால் சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாநிலத்தில் உள்ள 3 மின்விநியோக நிறுவனங்களும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் உள்ளன. தற்போதைய இலவச அறிவிப்பால் அவை மேலும் பாதிக்கப்படும்” என்று கூறினார்.

The post ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் appeared first on Dinakaran.

Related Stories: