வீட்டு வசதி வாரியம் பிரச்னைகளை தெரிவிக்க புகார் பெட்டி நாளை முதல் இயங்குகிறது வேலூர், திருவண்ணாமலை உட்பட 5 மாவட்டங்களில்

வேலூர், ஜூன் 2: வேலூர், திருவண்ணாமலை உட்பட 5 மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் பிரச்னைகளை தெரிவிக்க புகார் பொட்டி வைக்கப்பட உள்ளது. வேலூர் பிரிவில் நாளை முதல் இயங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட, நிலங்களை கையப்படுத்திய தொடர்பாக பிரச்னைகள், நிலங்களுக்கு, வீடுகளுக்கு பத்திரம் கிடைக்காதது என்று வீட்டு வசதி வாரியம் சார்ந்த பிரச்னைகளையும்,கோரிக்கைகளை ெதரிவிக்க முதல்வர் முன்னெடுப்பு திட்டம் என்ற பெயரில் புகார் பெட்டி நாளை முதல் வைக்கப்பட உள்ளது.

அதேபோல் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்ந்த பிரச்னைகள், கோரிக்கைகள் இருந்தால் வேலூர் வீட்டு வசதி வாரியம் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ள புகார் பெட்டியில் மனுக்களாக போடலாம். இந்த மனுக்கள் நேரடியாக சென்னைக்கு வீட்டு வசதி வாரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முதல்வருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டு வசதி வாரியம் தொடர்பான கோரிக்கை மனுக்களை நாளை மறுநாள்(நாளை) முதல் வேலை நாட்களில் வழங்கலாம் என்று வேலூர் வீட்டு வசதி வாரிய பிரிவு செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

The post வீட்டு வசதி வாரியம் பிரச்னைகளை தெரிவிக்க புகார் பெட்டி நாளை முதல் இயங்குகிறது வேலூர், திருவண்ணாமலை உட்பட 5 மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Related Stories: