சமுதாயகூடம் கட்ட பூமி பூஜை தேவிகாபுரத்தில்

சேத்துப்பட்டு, ஜூன் 2: மேற்கு ஆரணி ஒன்றியம் தேவிகாபுரம் பகுதியைச் சேர்ந்த மலையாம்புரடை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ₹20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயம் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து கட்டிடம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர் கணேஷ், கிளை செயலாளர் ஆறுமுகம், கரிப்பூர் கிளை கழக செயலாளர் தணிகைவேல், மருதபெரும்பட்டூர் பச்சமுத்து, விநாயகமூர்த்தி, பாஸ்கர், பாலசுப்பிரமணி, ராஜசேகர், பாலன், ஏழுமலை, முருகன், பாரதிராஜா, நித்தியானந்தம், ராஜேஷ், ஆனந்தன், மணிகண்டன் உள்பட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சமுதாயகூடம் கட்ட பூமி பூஜை தேவிகாபுரத்தில் appeared first on Dinakaran.

Related Stories: