இதனையடுத்து, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில், ஒவ்வொரு கிளை மற்றும் வார்டுகளில் கழகக்கொடி ஏற்றி, ஏழை-எளிய மக்கள் மற்றும் மகளிர்கள் பயன்பெறும் வகையில், நலதிட்ட உதவிகள், வேலை வாய்ப்பு முகாம்கள், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், அன்னதானம் வழங்குதல் மற்றும் மருத்துவமுகாம்கள் நடத்தி, கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய துணை செயலாளர்கள், ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு கலைஞரின் பிறந்தநாளில் ஏழைகளுக்கு அன்னதானம்: திமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.
