திருவனந்தபுரத்தில் இருந்து திருப்பதி உயிரியல் பூங்காவிற்கு மான்கள், கழுதைப்புலிகள் வருகை

திருமலை: திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் இருந்து திருப்பதி உயிரியல் பூங்காவிற்கு மான்கள், கழுதை புலிகள் வந்துள்ளது. இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் விலங்குகள் ஏதேனும் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அவை அந்தந்த மாநிலங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு தேவைக்கேற்ப விலங்குகளை பெற்றுக்கொள்வார்கள். அதன்படி கேரள மாநிலம் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் இருந்து 6 புள்ளிமான்கள், 4 கழுதைப்புலிகளை 2 லாரியில் நேற்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது.

இவை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு வந்தது. இவற்றுக்கு தேவையான பராமரிப்பு பணிகளை பூங்காவில் உள்ள பணியாளர்கள் செய்தனர். மேலும் திருப்பதி உயிரியல் பூங்காவில் இருந்து கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பூங்காவிற்கு 2 நாட்களில் ஒரு சில விலங்குகளை கொண்டு செல்ல இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவனந்தபுரத்தில் இருந்து திருப்பதி உயிரியல் பூங்காவிற்கு மான்கள், கழுதைப்புலிகள் வருகை appeared first on Dinakaran.

Related Stories: