கர்நாடகாவில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: ஒரு பெண் விமானி உட்பட இரு விமானிகள் உயிர் தப்பினர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துகுள்ளானது. நல்வாய்பாக விமானத்தில் இருந்த இரு பைலட்டுகளும் பராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் போகபுரா கிராமத்தில் இந்திய விமான படைக்கு சொந்தமான கிரண் பயிற்சி விமானம் ஒன்று புகுபுரா கிராமத்தில் திறந்தவெளி மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்பாக விமானத்தில் இருந்த ஒரு பெண் விமானி உட்பட இரு விமானிகளும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமான படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், நேற்று முன்தினம் இரு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெலகாவில் உள்ள சாம்ரா விமான நிலையம் அருகே உள்ள கிராமத்தில் விளை நிலத்தில் அவசரகதியில் தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

The post கர்நாடகாவில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: ஒரு பெண் விமானி உட்பட இரு விமானிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: