டெல்லி: ரூ.2000 நோட்டு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆவணங்கள் இன்றி ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம் என்ற அறிவிப்பை எதிர்த்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.