சென்னையில் போக்குவரத்து காவலர்களுக்கு ₹1 கோடியில் உபகரணங்கள்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்

சென்னை, ஜூன் 1: சென்னையில் போக்குவரத்து காவலர்களுக்கு ₹1 கோடியில் உபகரணங்களை வழங்கி, அதிநவீன கேமரா பொருத்திய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை போக்குவரத்து காவல், திறம்பட அமலாக்குவதன் மூலமாகவும், சாலையைப் பயன்படுத்துவோர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாகவும், போக்குவரத்து விதிமுறைகளை மேம்படுத்துவதற்கு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. தற்போதுள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு உபகரணங்களுக்கு கூடுதலாக, சென்னை போக்குவரத்து காவல், போக்குவரத்து சாலை பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியுள்ளது. மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்னேற்றமாக, பள்ளிகளுடன் இணைந்து போக்குவரத்து பூங்காவிற்கு மாணவர்களின் வருகையை வழிவகுக்க சென்னை போக்குவரத்து திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், நேற்று காலை நேப்பியர் பாலம் மற்றும் அண்ணா சதுக்கம் இடையே உள்ள போக்குவரத்து பூங்காவில், போக்குவரத்து காவல் உபகரணங்களை போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கினார். மேலும், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் அடங்கிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். போக்குவரத்து பூங்காக்களில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சராட்கர், போக்குவரத்து காவல் துணை ஆணையர்கள் சரவணன், (வடக்கு) சக்திவேல் (தெற்கு), சமய் சிங் மீனா, (கிழக்கு), ராதாகிருஷ்ணன் (பொறுப்பு) போக்குவரத்து திட்டமிடல்) மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ப்ரீத் அனலைசர்கள்: குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றங்களைக் கண்டறிய ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் 330 ப்ரீத் அனலைசர் இயந்திரங்கள் தவிர, 50 இயந்திரங்கள் வாங்கப்பட்டு விநியோகிக்க தயாராக உள்ளன. புதிய ப்ரீத் அனலைசர்களில் சிம் பொருத்தப்பட்டுள்ளதால், விவரங்கள் உடனடியாக சர்வருக்கு அனுப்பப்பட்டு, முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. ஊதுபவர்களின் முகத்தை தெளிவாக படம்பிடிக்க இது சிறந்த கேமரா தரத்தை கொண்டுள்ளது.

ரைபாட் கேமராக்கள்: இந்த கேமராக்கள் நகரின் எந்தப பகுதியிலிருந்தும் போக்குவரத்து நிலைமையை நேரலையாக கண்காணிக்க உதவுகின்றன. மேலும் சிம் கார்டு உள்ளதால் எங்கிருந்தும் கண்காணிக்க முடியும். விசேஷ சந்தர்ப்பங்கள் மற்றும் விஐபி நடமாட்டத்தின் போது போக்குவரத்தை கண்காணிக்கவும், வாகன சோதனைகளை கண்காணிக்கவும் இது குறிப்பாக உதவியாக இருக்கும் வாகன இடைமறிப்பு அமைப்பு: இந்த அமைப்புடன் இரண்டு ரோந்து வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது 360 டிகிரி சுழலக்கூடிய ANPR கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, டிரிபிள்ஸ் ரைடிங் வாகனம் ஓட்டும்போதும் செல்போன்களை பயன்படுத்துவது மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது போன்ற விதிமீறல்களை படம்பிடிக்க 2D ரேடார் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் அவற்றை சரிபார்த்த பிறகு சலான் உருவாக்கப்படுகிறது. சாதாரண இசலான் இயந்திரத்தைப் போலவே சட்டத்தை, மீறுபவருக்கு உடனடியாக அனுப்பப்படும் இந்த அமைப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், விதிமீறல்கள் நிலையான மற்றும் நிலைமாறும் பயன்முறையில் கைப்பற்றப்படலாம். இதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் நகரும் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய இயலும். தென்னிந்தியாவில், போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க இதுபோன்ற முறை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

பேரிகாடு ப்ளிங்கர் விளக்கு
சாலைகளில் முன்னே இருக்கும் பேரிகாடுகளை கண்டறிய ஈர்க்கும் வகையில் சிறந்த பார்வைக்காக, 100 பேரிகாடு ப்ளிங்கர் விளக்குகள் வாங்கப்பட்டுள்ளன.

பேட்டன் விளக்குகள்
625 பேட்டன் விளக்குகள் சார்ஜருடன் வாங்கப்பட்டு முறையான சமிக்ஞை மூலம் திறம்பட போக்குவரத்து ஒழுங்குமுறைக்காக கள அதிகாரிகளுக்கு விநியோகிக்க தயாராக உள்ளன.

என்னென்ன கருவிகள் எவ்வளவு?
வ. எண். போக்குவரத்து மற்றும்
பாதுகாப்பு கருவிகள் எண்ணிக்கை ஒரு கருவியின் தொகை (ரூ) மொத்த தொகை (ரூ)
1. பிரீத் அனலைசர் 50 37,996 18,99,800
2. டிரைபேட் கேமரா 80 19,988 15,99,040
3. வாகன இன்டர்செப்டர் சிஸ்டம் 02 11,21,000 22,42,000
4. பேரிகேட் ப்ளிங்கர் லைட் 100 5,426,82 5,42,682
5. பேட்டன் லைட்ஸ் 625 725 4,53,125
6. விஎம்எஸ் போர்டு 01 15,10,400 15,10,400
7. மெகா போன் 79 3,504.60 2,76,863
8. சா மெஷின் 30 24,603 7,38,090
போக்குவரத்து விழிப்புணர்வு முயற்சிகள்
9. போக்குவரத்து பூங்கா குழந்தைகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 10,00,000
10. மியூசிக் சிக்னல் எப்எம்முடன் ஒருங்கிணைந்து மொத்த தொகை 92,62,000

The post சென்னையில் போக்குவரத்து காவலர்களுக்கு ₹1 கோடியில் உபகரணங்கள்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: