அண்ணாநகர், மாதவரம் அரிசி குடோன்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

அம்பத்தூர், ஜூன் 1: சென்னை புறநகரில் உள்ள அரிசி குடோன்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் அரிசி குடோன்களை திடீர் சோதனை நடத்தி கண்காணிக்கும்படி ஐ.ஜி. காமினி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் குடிமை பொருள் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையிலான போலீசார் சென்னை அண்ணாநகர், மாதவரம், செங்குன்றம் ஆகிய பகுதியில் உள்ள அரிசி குடோன்களுக்கு சென்று சோதனை செய்தனர். நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனை நடந்தது. இதில் ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் லாரிகளில் உள்ள சரக்கு மற்றும் பில் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய மீண்டும் ஒருமுறை எடைமேடையில் நிறுத்தி சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

The post அண்ணாநகர், மாதவரம் அரிசி குடோன்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: