வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு; சுங்கத்துறை அதிகாரி, குடும்பத்தினருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.2.50 கோடி அபராதம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுங்கத்துறை துணை ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்றவர் விஜயன் (73). இவர் பணியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் விஜயன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.78.90 லட்சம் சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சொத்துக்களை மனைவி வசந்தா மற்றும் மகள்கள் தன்யா, திவ்யா, நவ்யா ஆகியோரின் பெயர்களில் வாங்கி இருந்தார். இந்த வழக்கு எர்ணாகுளம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜயன், அவரது மனைவி வசந்தா மற்றும் 3 மகள்களுக்கு 2 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.2.50 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு; சுங்கத்துறை அதிகாரி, குடும்பத்தினருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.2.50 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: