மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும்: இந்தியாவின் டபிள்யூபிஎல்

வெலிங்டன்: ‘இந்தியாவில் மகளிருக்கான டபிள்யூபிஎல் கிரிக்கெட் போட்டி ஒரு மதிப்புமிக்க போட்டியாகும். இது உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும்’ என்று நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை அமிலியா கெர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமிலியா நேற்று அளித்த பேட்டியில், ‘தொழில்முறை விளையாட்டில் இருப்பதின் மூலம், நாம் கடினமாக உழைக்க முடியும். கூடவே உழைப்பதுதான் எங்கள் வேலை. அதைதான் நாள்தோறும் செய்து வருகிறாம்.

மகளிர் கிரிக்கெட் விளையாட்டில் இனி ‘அதிக முதலீடு’ செய்ய நியூசிலாந்து தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும். இந்தியாவின் மகளிர் டி20 போட்டியான டபிள்யூபிஎல் தொடரின் ஒரு அங்கமாக இருப்பதும், அங்கு கிரிக்கெட் விளையாடுவதும் மகிழ்ச்சியானவை. இந்தியாவில் கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை அங்கு நிறைந்திருக்கும் அரங்கங்கள் சாட்சி. அவ்வளவு பேர் முன்பாக விளையாடுகிறோம் என்பது நம்ப முடியாத, அற்புதமான காட்சி. டபிள்யூபிஎல் ஒரு மதிப்புமிக்க போட்டியாகும். அது வாழ்க்கையை மாற்றும். அதுமட்டுமல்ல டபிள்யூபிஎல் உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தப் போகிறது’ என்று கூறியுள்ளார்.

The post மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும்: இந்தியாவின் டபிள்யூபிஎல் appeared first on Dinakaran.

Related Stories: