சென்னையில் ஒரு நாள் சிறப்பு சோதனையில் நேற்று ஒரே நாளில் 14.54 கிலோ கஞ்சா பறிமுதல்: 19 பேர் கைது

சென்னை: சென்னையில் ஒரு நாள் சிறப்பு சோதனையில் நேற்று ஒரே நாளில் 14.54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ ஆகிய சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் நேற்று போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs தொடர்பாக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்கள் என மொத்தம் 242 இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 19 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14.54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று வில்லிவாக்கம், மார்கெட் அருகில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1.கிரண்குமார், வ/24, த/பெ.மோகன், எண்.3/59, கடப்பாரோடு, திருவள்ளுவர் நகர், லட்சுமிபுரம், கொளத்தூர், சென்னை 2.சித்திக், வ/49, த/பெ.உமர், எண்.39, கண்ணையா தெரு, அம்பத்தூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி கிரண்குமார் மீது ஏற்கனவே 3 கஞ்சா வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (30.05.2023) அதம்பாக்கம், பெரியார் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா மற்றும் டைடால் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 1.உதயகுமார், வ/25, த/பெ.உத்தண்டி, டாக்டர் அம்பேத்கர் நகர், சென்னை 2.இளங்கோ, வ/24, த/பெ.ராஜா, பரமேஸ்வரன் நகர் முதல் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 3.செந்தில்குமார், வ/24, த/பெ.உத்தண்டி, டாக்டர் அம்பேத்கர் நகர், சென்னை 4.மணிகண்டன், வ/24, த/பெ.ராஜா, மேடவாக்கம், சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் 550 டைடால் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் இதர இடங்களிலும் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், எச்சரித்துள்ளார்.

The post சென்னையில் ஒரு நாள் சிறப்பு சோதனையில் நேற்று ஒரே நாளில் 14.54 கிலோ கஞ்சா பறிமுதல்: 19 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: