தேசிய அதி விரைவு ரயில் கழகத்தில் 64 இடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய அதி விரைவு ரயில் கழகத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட 64 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்

1. Technician (S & T): 8 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, ஒபிசி-2). வயது: 20 லிருந்து 40க்குள். சம்பளம்: ரூ.35,000-1,10,000. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி அல்லது எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ்/எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர்/தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம்.

2. Junior Engineer ( S & T): 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 20 லிருந்து 45க்குள். சம்பளம்: ரூ.40,000-1,25,000. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ்/எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்.,/ தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம்.

3. Assistant Manager (Civil): 11 இடங்கள் (பொது-7, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ/பி.இ./பி.டெக்., தேர்ச்சியுடன் 4 வரு பணி அனுபவம்.

4. Assistant Manager (Planning): 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம்.

5. Assistant Manager ( Human Resources): 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Human Resource Management/ Public Administration பிரிவில் முதுநிலை பட்டம்/எம்பிஏ/எம்எஸ்டபிள்யூ இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம்.

6. Junior Manager (Civil): 12 இடங்கள் (பொது-7, எஸ்சி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.

7. Junior Manager (Electrical): 21 இடங்கள் (பொது-10, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-2). சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம். பணி எண்: 3 லிருந்து 7 வரைக்கும் வயது: 20 லிருந்து 35க்குள்.

கட்டணம்: ரூ.400/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. சிபிடி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.nhsrcl.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: 31.5.2023.

The post தேசிய அதி விரைவு ரயில் கழகத்தில் 64 இடங்கள் appeared first on Dinakaran.

Related Stories: