ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமோகா ரக நெல் ₹1690க்கு விற்பனை வேலூர் டோல்கேட்

வேலூர், மே 31: வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமோகா ரக நெல் ₹1,690க்கு விற்பனையானது. வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம்பட்டு, பென்னாத்தூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அவைகளை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து பணத்தை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மட்டும் விற்பனை கூடத்திற்கு அதிகபட்சமாக அமோகா நெல் ரகம் 75 கிலோ அதிகபட்சமாக ₹1,690க்கும், குறைந்த பட்ச விலை ₹1,509க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கோ 51 வகை ₹1,217க்கும், ஹெச்எம்டி அதிகபட்சமாக ₹1,602க்கும், குறைந்த பட்ச விலை ₹1,251க்கும், மகேந்திரா 606 ரகம் அதிகபட்சமாக ₹1,602க்கும், குறைந்த பட்ச விலை ₹1,503க்கும், ஏடிடி 37 அதிகபட்சமாக ₹1,269க்கும், சோனா ₹1,557க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், மணிலா 80 கிலோ ₹7,501 முதல் ₹8,288க்கும், தேங்காய் கிலோவிற்கு ₹51.58 முதல் ₹70க்கு கொள்முதல் செய்யப்பட்டது. எள் 80 கிலோ ₹10,688க்கும், கம்பு 100 கிலோ ₹3020-3120க்கும், கொள்ளு 100 கிலோ ₹5,451க்கும், மக்காச்சோளம் 100 கிலோ ₹2,100க்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பழனி தெரிவித்தார்.

The post ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமோகா ரக நெல் ₹1690க்கு விற்பனை வேலூர் டோல்கேட் appeared first on Dinakaran.

Related Stories: