மலையாள நடிகர் ஹரீஷ் பேங்கன் மரணம்

திருவனந்தபுரம்: மகேஷின்டெ பிரதிகாரம், ஜானே மன், ஜெய ஜெய ஜெய ஹே, ஜோ அண்ட் ஜோ, மின்னல் முரளி உள்பட ஏராளமான மலையாளப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ஹரீஷ் பேங்கன் (48). கடந்த சில மாதங்களாக இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்திலுள்ளஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது தங்கை கல்லீரல் தானமாக கொடுக்க முன்வந்தார். உறவினர்கள் சிகிச்சைக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நடிகர் ஹரீஷ் பேங்கன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post மலையாள நடிகர் ஹரீஷ் பேங்கன் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: