புன்னகை தூதராக சச்சின் நியமனம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் புன்னகை தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஸ்வச் முக் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது வாய்வழி ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு கற்பிப்பிதற்கும் இந்திய பல் மருத்துவ சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தேசிய பிரசாரமாகும். இந்த பிரசாரத்திற்கான புன்னகை தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஸ்வச் முக் அபியான் பிரசார தூதராக சச்சின் டெண்டுல்கர் இருப்பார். இதுகுறித்து சச்சின் கூறும்போது,’நான் இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தபோது, ​​பள்ளியிலிருந்து வெளியே வந்திருந்தேன். நான் பல விளம்பரச் சலுகைகளைப் பெற ஆரம்பித்தேன், ஆனால் புகையிலை பொருட்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று என் தந்தை என்னிடம் கூறினார். அவற்றில் எதையும் நான் ஏற்கவில்லை’ என்றார்.

The post புன்னகை தூதராக சச்சின் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: