சூலூர் ஜமாபந்தியில் 10 மனுக்களுக்கு தீர்வு

 

சூலூர், மே 31: சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தலைமை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் சாந்தி தலைமையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. முகாமில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டது. இதில் கருமத்தம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, 118 மனுக்களும், சூலூரில் 138 மனுக்களும், செலக்கரிசல் பகுதியில் 108 மனுக்களும், வாரப்பட்டி பகுதியில் 70 மனுக்களும் என 434 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் பட்டா மாறுதல் பட்டா வழங்குதல் என 10 பேரின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சூலூர் ஜமாபந்தியில் 10 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: