கோயிலுக்கு சென்ற போது சோகம் ஜம்முவில் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

ஜம்மு: ஜம்முவில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 57 பேர் காயமடைந்தனர். அமிர்தசரசில் இருந்து ஜம்முவில் உள்ள கத்ரா நோக்கி இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் சுமார் 70 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பீகார் மாநிலம் லகிசாராய் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த பஸ் ஜஜ்ஜார் கோட்லி அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 8 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 57 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

The post கோயிலுக்கு சென்ற போது சோகம் ஜம்முவில் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: