ஏர் இந்தியா விமான ஊழியர் மீது தாக்குதல்: முரட்டு பயணி கைது

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பணியாளர் மீது தாக்குதல் நடத்திய பயணி கைது செய்யப்பட்டார். ஏர்இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ882 விமானம் கோவாவில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஒரு ஆண் பயணி விமான ஊழியர்களை கடுமையான, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஒரு ஊழியர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார். இதனால் ஊழியர்களும், பிற பயணிகளும் அச்சம் அடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னரும் அந்த பயணி மோசமாக நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து அவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த பயணி ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதற்கான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதேபோன்று கடந்த மாதம் 10ம் தேதி டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சென்ற பயணி ஒருவர் பணியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

The post ஏர் இந்தியா விமான ஊழியர் மீது தாக்குதல்: முரட்டு பயணி கைது appeared first on Dinakaran.

Related Stories: