வரி செலுத்துவோருக்கான இ-மேல்முறையீடு திட்டம் அறிமுகம்

புதுடெல்லி: வரி செலுத்துவோர் தங்கள் புகார்களை மின்னணு முறையில் மேல்முறையீடு செய்யும் திட்டத்தை ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிமுகம் செய்துள்ளது. வரி செலுத்துவோர், வரி மதிப்பீட்டு உத்தரவுக்கு எதிராக ஒன்றிய நேரடி வரிகள் வாரியத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதற்காக மின்னணு மேல்முறையீடு திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்னணு மேல்முறையீடு புகார்களை வாரியத்தின் இணை ஆணையர் (மேல்முறையீடு) தீர்த்து வைப்பார். புகார்கள் மீது வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்படும். இது வரி செலுத்துவோருக்கு பதிலளிக்க போதுமான நேரத்தை வழங்குவது, நடைமுறை சாத்தியத்தை பொறுத்து, விரைந்து தீர்வு பெற உதவும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post வரி செலுத்துவோருக்கான இ-மேல்முறையீடு திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: