பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிடில் நாட்டிற்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம்.. மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு..!!

டெல்லி: பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிடில் நாட்டிற்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு மாதமாக மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவின்போது பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் மாலை 6 மணிக்கு வீசிவிடுவோம் என மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். எங்களை மகள் என அழைக்கும் பிரதமர் மோடி, எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இதுவரை கேட்கவில்லை என சாடியுள்ளனர். துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள் என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

நாங்கள் பெற்ற பதக்கங்கள் இனி எங்களுக்கு தேவையில்லை. கடுமையான உழைப்பால் கிடைத்த பதக்கங்களை புனித நதியான கங்கையில் வீசுவோம் என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மல்யுத்த வீரர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

The post பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிடில் நாட்டிற்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம்.. மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: