மோடி பிரதமராகி 9 ஆண்டுகள் நிறைவு; மேலும் கடினமாக உழைக்க அழைப்பு!

டெல்லி: மோடி பிரதமராகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் வௌியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வராக இருந்த மோடி கடந்த 2014 மே 26ம் தேதி முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன்பின் 2019 மே 30ம் தேதி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இன்றுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 9 ஆண்டுகளை நிறைவு செய்து, 10வது ஆண்டில் நுழைகிறது. அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதம் வாக்கில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேலைகளில் பாஜக தலைமை இறங்கியுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து, பிரதமர் மோடி இன்று வெளியிட்ட பதிவில், ‘நாட்டிற்காக சேவையாற்றி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. மிகவும் நன்றியுள்ளவனாக கடமைப்பட்டுள்ளேன். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு செயலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் எடுக்கப்படுகிறது. நாம் மேலும் கடினமாக உழைக்க வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம்’ என்று தெரிவித்துள்ளார். இன்று தொடங்கி நாடு முழுவதும் ஒரு மாத காலத்தற்கான சிறப்பு பிரசாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

The post மோடி பிரதமராகி 9 ஆண்டுகள் நிறைவு; மேலும் கடினமாக உழைக்க அழைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: