பியாஜியோ ஸ்கூட்டர்

பியாஜியோ வெகிகிள்ஸ் நிறுவனம், டூயல் டோன் கொண்ட வெஸ்பா ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. தனித்துவம் மிக்க தோற்றத்தை விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், 125 சிசி மற்றும் 150 சிசி மாடல்களில் கிடைக்கிறது. இதில் சீட் மற்றும் கால் வைக்கும் பகுதிகள் தனிப்பட்ட வண்ணம் கொண்டதாக இருக்கும். ஸ்கூட்டர் பியர்ல் ஒயிட் நிறத்தில் இருக்கும். சீட் மற்றும் கால் வைக்கும் பகுதி சிவப்பு, பீஜ், வெளிர் நீலம், கருப்பு என நான்கு வண்ணங்களில்இருக்கும். விஎக்ஸ்ல் மற்றும் எஸ்எக்ஸ்எல் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன.

விஎக்ஸ்எல் ஷோரூம் விலை 125 சிசி சுமார் ரூ.1.32 லட்சம், 150 சிசி சுமார் ரூ.1.46 லட்சம் எனவும், எஸ்எக்ஸ்எல் வேரியண்டில், 125 சிசி சுமார் ரூ.1.37 லட்சம், 150 சிசி சுமார் ரூ.1.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்ஜின் திறனில் எந்த மாற்றமும் இல்லை. புதிய விதிகளுக்கு ஏற்ப, ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில் நுட்பம் இடம் பெற்றுள்ளது. 125 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 9.65 எச்பி பவரையும், 10.11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், 150 சிசி மோட்டார் அதிகபட்சமாக 10.64 எச்பி பவரையும் 11.26 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

The post பியாஜியோ ஸ்கூட்டர் appeared first on Dinakaran.

Related Stories: