முன்னணி வீரர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு அபினவ் பிந்த்ரா ஆதரவு!!

டெல்லி : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு முன்னணி விளையாட்டு வீரர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில், துப்பாக்கிச் சுடுதல் சேம்பியன் அபினவ் பிந்த்ரா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். டெல்லியில் போராட்டம் நடத்திய போது மல்யுத்த வீராங்கனைகளை இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் வீராங்கனைகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற விளையாட்டு வீரர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில், துப்பாக்கிச் சுடுதல் சேம்பியன் அபினவ் பிந்த்ரா தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். சக வீரர்களின் நிலையை பார்த்து மனதளவில் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து விளையாட்டுகளிலும் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ள அபினவ் பிந்த்ரா,இது போன்ற பிரச்சனைகள் அந்த அமைப்பை விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பாதுகாப்பான சூழல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

The post முன்னணி வீரர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு அபினவ் பிந்த்ரா ஆதரவு!! appeared first on Dinakaran.

Related Stories: