(தி.மலை) கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது வந்தவாசி அருகே

வந்தவாசி, மே 30: வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வந்தவாசி அடுத்த தேசூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாய்ராம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தேசூர் நகரில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் இரண்டு வாலிபர்கள் கைப்பையுடன் தப்பி ஓடினர். அப்போது இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிங்கார முதலியார் தெருவை சேர்ந்த சங்கர் மகன் துரைமுருகன் (23) பருவதராஜ குல தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் நந்தகுமார் (26) என தெரியவந்தது. இருவரையும் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரையும் போளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post (தி.மலை) கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது வந்தவாசி அருகே appeared first on Dinakaran.

Related Stories: