கீழ்பென்னாத்தூர், மே 30: திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய பாஜக சிறப்பு செயற்குழு கூட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பாவேந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பார்வையாளர் மற்றும் ‘மனதின் குரல்’ மாவட்ட பொறுப்பாளரான இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 9 ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post (தி.மலை) பாஜக ஒன்றிய செயற்குழு கூட்டம் கீழ்பென்னாத்தூரில் appeared first on Dinakaran.