(வேலூர்) வருகிற 19ம் தேதி பட்டமளிப்பு விழா கவர்னர், அமைச்சர்கள் பங்கேற்பு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

திருவலம், மே 30: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வருகிற 19ம் தேதி 17வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில், கவர்னர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழா ஜூன் 19ம்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழா ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் கவர்னர் என்.ஆர்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் மாநில சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிவ் பங்கேற்க உள்ளனர். 545 பேருக்கு பட்டங்களை வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகம் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு 1,10 லட்சம் பட்டங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் எம்ஏ, எம்எஸ்.சி, எம்.காம் மற்றும் டிப்ளமோ படிப்புகள் என 14 புதிய பாடப்பிரிவுகள் தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக உயர் கல்வித்துறையில் எடுக்கப்படும் பல்வேறு நல்ல திட்டங்களுக்கான நடவடிக்கையால் மாணவர்கள் சேர்க்கை கடந்தாண்டை விட இந்தாண்டு 1.50 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
அப்போது பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன், வளாக இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

The post (வேலூர்) வருகிற 19ம் தேதி பட்டமளிப்பு விழா கவர்னர், அமைச்சர்கள் பங்கேற்பு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: