(வேலூர்) விவசாய நிலத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது பேரணாம்பட்டு அருகே அதிகாலை பரபரப்பு

பேரணாம்பட்டு, மே 30: பேரணாம்பட்டு அருகே அதிகாலை விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்த 2 யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் காட்டுயானைகள் அவ்வப்போது விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 2 காட்டுயானைகள் கிராமத்திற்குள் நுழைந்தது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கோபிநாத் மற்றும் வேணுகோபால் ஆகியோர்களின் விவசாய நிலத்தில் அரை ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிர்களை சேதப்படுத்தியது. மேலும், 2 மாமரங்களை முறித்துள்ளது. யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியத்தனர். தொடர்ந்து, அந்த யானைகள் ஆந்திர எல்லை பகுதியான நெல்பட்லா காட்டிற்குள் சென்றன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

The post (வேலூர்) விவசாய நிலத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது பேரணாம்பட்டு அருகே அதிகாலை பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: