சிறப்பு திட்டம் அறிவித்து மலை கிராமங்களுக்கு 6 மாதத்தில் சாலை வசதி: அன்புமணி கோரிக்கை

சென்னை: சிறப்பு திட்டம் அறிவித்து, அனைத்து மலை கிராமங்களுக்கும் 6 மாதத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்து விட்டது. உடற்கூராய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர்.

சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் இனி நடக்கக் கூடாது. அதிவிரைவுச் சாலைகளும், எட்டு வழிச் சாலைகளும் அதிக அளவில் அமைக்கப்பட்டு வரும் சூழலில், மலைக்கிராமங்களுக்கும் சாலைகள் அமைக்க வேண்டும். அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சிறப்பு திட்டம் அறிவித்து மலை கிராமங்களுக்கு 6 மாதத்தில் சாலை வசதி: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: