கனடாவில் இந்திய வம்சாவளி தாதா சுட்டுக்கொலை

ஒட்டாவா: கனடாவின் வான்கூவர் நகரில் திருமண விழா நடைபெற்றது. இதன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கேங்ஸ்டார் பட்டியலில் இடம்பெற்று இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அமர்பிரீத் சம்ரா மற்றும் அவரது சகோதரர் ரவீந்தர் ஆகியோர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர். அமர்பிரீத் அங்குள்ள நடன அரங்கில் ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள சாலை ஒன்றில் அமர்பிரீத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தார். அடையாளம் தெரியாத கும்பல் அவரை சுட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கனடாவில் இந்திய வம்சாவளி தாதா சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: