அசாமில் விபத்து 7 இன்ஜி. மாணவர்கள் பலி

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியில் நடந்த சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்தனர். அசாமின் கவுகாத்தியில் உள்ள அசாம் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 10 பேர் நேற்று அதிகாலை கல்லூரியில் இருந்து காரில் சென்றனர். ஜலுக்பாரி பகுதியில் அதிவேகத்தில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த விபத்தில் காரிலிருந்து 7 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

The post அசாமில் விபத்து 7 இன்ஜி. மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: