கார் மீது பஸ் மோதி கர்நாடகாவில் 10 பேர் பலி

மைசூரு: கர்நாடகாவில் மைசூரு மாவட்டம், டிநரசிபுரா தாலுகா குருபுரு கிராமம் அருகே காரும், தனியார் பேருந்தும் நேற்று, நேருக்கு நேராக பயங்கரமாக மோதி கொண்டது. இதில், சொகுசு கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முதல்கட்ட விசாரணையில், காரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 13 பேர் பயணம் செய்துள்ளனர். அனைவரும் பெல்லாரியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மலை மாதேஸ்வரா கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்து, சொந்த ஊர் திரும்பும்போது, விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கார் மீது பஸ் மோதி கர்நாடகாவில் 10 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: