போபால்: உஜ்ஜைனில் உள்ள மஹாகாளேஷ்வர் கோயிலில் பலத்த காற்றின் காரணமாக ஆறு ‘சப்தரிஷி’ சிலைகள் விழுந்து சேதம் அடைந்தன. மத்திய பிரதேசம், உஜ்ஜைனியில் புகழ்பெற்ற மஹாகாளேஷ்வர் கோயில் உள்ளது.ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவியும் நாட்டிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மஹாகாளேஷ்வர் கோயில், இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும்.
மகாகாளேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டம் ரூ.856 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் உஜ்ஜைனில் நேற்று அதிகாலை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக மகாகாளேஷ்வர் கோயிலில் 6 சப்தரிஷி சிலைகள் விழுந்து சேதம் அடைந்தன.
The post உஜ்ஜைன் மகாகாளி கோயில் சிலைகள் சூறைக்காற்றில் சேதம் appeared first on Dinakaran.