அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது: ஆசிரியர்களை மதிக்கும் இயக்கம் திராவிட இயக்கம். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை 2006ம் ஆண்டு கால முறை ஊதியத்துக்கு கொண்டு வந்தது கலைஞர்தான். 652 ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. ஆசிரியர் பணி மாறுதல் வெளிப்படையாக கவுன்சலிங் முறைப்படி, 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிட மாறுதலை செலவில்லாமல் பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுளுக்கும் அது செல்லும் என்று முதல்வர் அறிவித்தார். அரசுப் பள்ளியில் படித்த மாணவி 600 மதிப்பெண் பெற்றதற்கும் காரணம் நீங்கள்தான், அதேபோல மாற்றுப் பாலின மாணவியும் சாதனை படைத்ததற்கு நீங்கள் தான் காரணம். இவற்றை மனதில் வைத்துத்தான் ஆசிரியர்களுக்கு பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் நலன் காப்பதில் இந்த அரசு துணை நிற்கும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
The post ஆசிரியர்கள் நலன் காப்பதில் அரசு உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.