2026ல மதுரை எய்ம்ஸ் வந்துரும்: உண்மையா தான் சொல்றாரு ஒன்றிய அமைச்சர் ஜிஜேந்திர சிங்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை 2026 மார்ச் மாதத்துக்கு முன்பாக முடிக்க விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் ஜிஜேந்திர சிங் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங் அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் கடின உழைப்பால் தற்சார்பு இந்தியா தழைத்தோங்கியுள்ளது. நாட்டில் 2014ம் ஆண்டு வரையில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தது. தற்போது 148 விமான நிலையங்களாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு பெற்றோர் அனுப்பாமல் இருந்தனர்.

2014ம் ஆண்டுக்கு முன்பு 3.25 கோடி வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. 70 ஆண்டுகளில் 7 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் மட்டும் இருந்தது. இந்த 9 ஆண்டில் 15 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணி 2026 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்து இருந்தோம். எனினும் அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பேட்டியின் போது பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post 2026ல மதுரை எய்ம்ஸ் வந்துரும்: உண்மையா தான் சொல்றாரு ஒன்றிய அமைச்சர் ஜிஜேந்திர சிங் appeared first on Dinakaran.

Related Stories: