ஐபிஎல் இறுதிப்போட்டி: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி!

அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்களை குஜராத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், விருதிமன் சஹா களமிறங்கினர்.

அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆகியுள்ளார். அடுத்துவந்த சாய் சுதர்ஷனுடன் ஜோடி சேர்ந்த சஹா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சஹா 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்த நிலையில் தீபக் சஹார் பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆகியுள்ளார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை அணி பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட் ஆகியுள்ளார். சாய் சுதர்ஷன் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.

இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 215 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்துள்ளது.

The post ஐபிஎல் இறுதிப்போட்டி: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி! appeared first on Dinakaran.

Related Stories: