கேரட் ஐஸ்கிரீம்

தேவையானவை:

கேரட் வேகவைத்து அரைத்த விழுது – 2 கப்,
பால் – 1 கப்,
சர்க்கரை – ¼ கப்,
பிஸ்தா பருப்பு – 8,
வெனிலா எசென்ஸ் – ¼ டீஸ்பூன்,
ஃபுட்கலர் – ½ டீஸ்பூன்.

செய்முறை:

கேரட் விழுதுடன் சர்க்கரைச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் பாலையும் சேர்த்துக் கலக்கவும். கலவையை அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி ஆற விடவும். கலவை ஆறியதும் வெனிலா எசென்ஸ், ஃபுட்கலர் சேர்த்துக் கலக்கி ஃபிரீசரில் வைக்கவும். ½ மணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃபிரீசரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்துப் பரிமாறவும்.

The post கேரட் ஐஸ்கிரீம் appeared first on Dinakaran.