ஸ்ப்ரவுட்ஸ் சாலட்

தேவையானவை:

முளைக்கட்டிய பச்சைப் பயறு – 1 கப்,
வேகவைத்து தோலுரித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1,
வேகவைத்த வேர்க்கடலை – ½ கப்,
கேரட் – 1 (துருவியது),
கிளிமூக்கு மாங்காய் – பாதி,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
பச்சை மிளகாய் தலா – 1,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
தோல்சீவி வேகவைத்த பீட்ரூட் – 1 (சிறியது),
சில்லி ஃபிளேக்ஸ் – 1 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை சிறியத் துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த பீட்ரூட்டை நீள மெல்லியக் குச்சிகளாக நறுக்கிக் கொள்ளவும். முளைக்கட்டிய பச்சை பயரை லேசாக ஆவியில் வேகவைத்து நன்றாக ஆறவைக்கவும். பச்சைப் பயறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வேகவைத்த வேர்க்கடலை, துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு, சில்லி ஃபிளேக்ஸ், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் ஒரு பெரிய பவுலில் போட்டு நன்றாகக் கலக்கவும். நீளமாக வெட்டிய பீட்ரூட்டை மேலேத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

The post ஸ்ப்ரவுட்ஸ் சாலட் appeared first on Dinakaran.