டெல்லி திகார் சிறையில் இருதரப்பு கைதிகள் இடையே மோதல்..!!

டெல்லி: டெல்லி திகார் சிறையில் இருதரப்பு கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். தலைநகர் டெல்லி திகார் சிறையில் மீண்டும் குண்டர் சண்டை சம்பவம் அரங்கேறியுள்ளது. திகார் சிறைக்குள் கூரிய ஊசியால் கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் இரத்தக்களரி மோதல் ஏற்பட்டுள்ளது , இந்த தாக்குதலில் இரண்டு கைதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலவரத்தை அடுத்து சிறையின் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

பலத்த போலீஸ் படை சிறை வளாகத்திற்கு வந்துள்ளது, மூத்த அதிகாரிகளும் வந்து நிலைமையை பார்வையிட்டனர். மேலும் மோதலில் காயமடைந்த கைதிகள் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அனுமதிக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் திகார் சிறையில் ரவுடி கும்பலை சேர்ந்த தில்லு எதிர்த்தரப்பு கைதிகளால் தாக்கி கொல்லப்பட்டார். அவரின் கொலை தொடர்பாக சிறையில் இருந்து 80 காவல்துறை அதிகாரிகள் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டெல்லி திகார் சிறையில் இருதரப்பு கைதிகள் இடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: