மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிப்போம்: ராகுல் காந்தி நம்பிக்கை

டெல்லி: மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ராகுல் காத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்களில் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இந்த 4 மாநில கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் பேட்டியளித்த ராகுல் காந்தி கர்நாடகத்தில் 136 இடங்களை பிடித்ததை போல மத்திய பிரதேசத்தில் 150 இடங்களை பிடித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் ஆம்.ஆத்மி அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லியில் குடிமை பணி அதிகாரிகளை இடம்மாற்றம் செய்வது மற்றும் நியமனம் செய்வதற்கான அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் அவரசர சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்குமாறு பல்வேறு தலைவர்களிடம் முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்து வருகிறார். காங்கிரஸ் தலைவர்களையும் சந்திக்க கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் அது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

The post மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிப்போம்: ராகுல் காந்தி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: