ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது 3.8 ரிக்டர் அளவில் பதிவானது. ஐந்து முதல் 10 வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம், மெல்போர்னில் இருந்து ஹோபார்ட் வரை உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் காட்சிகளை சமூக ஊடகங்களில் மக்கள் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி ஆடம் பாஸ்கேல் கூறுகையில், ‘இந்த நிலநடுக்கம் கடந்த 2021 செப்டம்பரில் இருந்ததை காட்டிலும் 100 மடங்கு பாதிப்பு குறைந்தது’ என்றார்.

அதேபோல் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி மூன்று குழந்தைகள் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலம் சோனிட்பூரில் இன்று காலை 8.03 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் இருந்ததாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

The post ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: