டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது..!!

டெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் ஷாஹில் கைது செய்யப்பட்டார். ஷஹாபாத்தில் உள்ள ஜேஜே காலனியை சேர்ந்த ஜானக்ராஜ் என்பவரின் மகள் சாக்ஷி. இவர் சாஹில் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், சாக்ஷி தனது தோழியின் பிறந்தநாளில் கலந்து கொள்ள தனது வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

அப்போது பால் பண்ணை பகுதியில் சாஹல் சிறுமியை தெருவில் நிற்க வைத்து சில வினாடிகளுக்குப் பிறகு சிறுமியை கத்தியால் தாக்கத் தொடங்கினான். சிறுமியை தொடர்ந்து கத்தியால் குத்துவதும், தெருவில் அவருக்கு அருகில் ஆட்கள் வருவதும் போவதுமாக காணப்பட்டது, ஆனால் யாரும் தலையிடவில்லை. சாஹல் அவரை கத்தியால் தொடர்ந்து 40 முறைக்கு மேல் குத்தினார். அதன் பிறகு பலமுறை கல்லால் அடித்துள்ளார். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிறுமியை கொன்று ஷாஹில் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் சுமன் நல்வா, இந்த கொடூரமான சம்பவம் குறித்து பதிலளித்து, சாஹல் விரைவில் கைது செய்யப்படுவார் என்று உறுதியளித்திருந்தார்.

கொலையாளியை பிடிக்கும் பணியில் காவல்துறை தீவிரம் காட்டி வந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் புலந்த்சாஹர் நகரில் தலைமறைவாக இருந்த சாஹிலை 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமி கொலை தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

The post டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: