விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர்: மருத்துவமனையில் அனுமதி!

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் ஷர்வானந்தின் கார் விபத்துக்குள்ளானதால், அவர் தற்போது அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தெலுங்கு நடிகர் ஷர்வானந்தின் தனது விலைமதிப்புமிக்க காரில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள பிலிம் நகரை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது அவரது கார், அங்கிருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த உடனேயே, அங்கிருந்தவர்கள் நடிகர் ஷர்வானந்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், காயம் பெரிதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஷர்வானந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நான் பாதுகாப்பாக உள்ளேன். எனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். பயப்பட ஒன்றுமில்லை’ என்று தெரிவித்துள்ளார். ஷர்வானந்தின் கார் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

The post விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர்: மருத்துவமனையில் அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: