என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 12 ராக்கெட்..!!

ஸ்ரீஹரிகோட்டா: என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் 2,232 கிலோ எடை கொண்ட என்விஎஸ் – 01 என்ற வழிகாட்டு செயற்கைகோள் அனுப்பப்பட்டு புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இரண்டாவது தலைமுறை செயற்கை கோள்களில் இது முதன்மையானது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை என்விஎஸ் -01 செயற்கைகோள் கண்காணிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளின் சிறப்பம்சங்கள்:

* ஜிஎஸ்எல்வி- எஃப் 12 ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும், 420 டன் உந்துவிசை எடையும் கொண்டது.

* 2,232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ்- 01 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

* என்.வி.எஸ்- 01 இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட நேவிகேஷன் செயற்கைக்கோள்.

* செல்போன்களுக்கான நேவிகேஷன் வசதி, அரசு, நிதி, மின்துறை நிறுவனங்களுக்கு தரவுகளை பெறமுடியும் என தகவல்.

* புவிநிலை சுற்றுப்பாதையில் 36,000 கி.மீ உயரத்தில் நிறுத்த திட்டம்.

* நிலை, வேகம், இடம், நேரம் உள்ளிட்ட தகவலை துல்லியமாக வழங்க முடியும்.

* நிலத்திலும் கடற்பரப்பிலும் பயணிக்கும் இடத்தையும், தொலைவையும் மிகவும் துல்லியமாக கணிக்க முடியும்.

* சொந்த நேவிகேசன் அமைப்புகளை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

* எல்-1, எல்-5, எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உள்பட பல அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் செயற்கைக்கோளில் உள்ளன.

The post என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 12 ராக்கெட்..!! appeared first on Dinakaran.

Related Stories: