ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12’ ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஜிஎஸ்எல்வி எப்12 ராக்கெட் சுமார் 51.7 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தமாக 420 டன் உந்துவிசை எடை உடையது. ஜிஎஸ்எல்வி வரிசையில் தற்போது ஏவப்படவுள்ள ராக்கெட்15ஆவதாக செலுத்தப்படும் ராக்கெட் ஆகும். இதனுடன் 2 ஆயிரத்து 232 கிலோ எடையுள்ள ‘என்விஎஸ்-01’ எனும் வழிகாட்டி செயற்கைகோளும் பூமி சுற்றுப்பாதையில் 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.

The post ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12’ ராக்கெட் appeared first on Dinakaran.

Related Stories: