நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை புறக்கணித்தது ஏன்: டி.ஆர்.பாலு எம்.பி பேச்சு

சென்னை: நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில், நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை அழைக்காமல் புறக்கணித்தது ஏன் என்று திமுக நடந்த சார்பில் செயல்வீரர்கள் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி எழுப்பினார். சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியில் பல்லாவரம் வடக்கு பகுதி திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி எஸ்.ஆர் ராஜா, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அவர் தலைமையில் தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும். அவர் தலித் பெண் என்பதாலா அல்லது மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவரின் மகள் என்பதால் புறக்கணிக்கப்பட்டாரா. குடியரசுத் தலைவர் வருகை தந்தால் புதிய கட்டிடத்தின் கல்வெட்டில் அவரது பெயரையும் சேர்க்க வேண்டும். மாறாக அவரை அழைக்கவில்லை என்றால் பிரதமர் பெயரை மட்டும் சேர்த்தால் போதுமானது. குடியரசுத் தலைவரை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்துள்ளார். பிரதமரை போல் அல்லாமல் நமது தமிழக முதல்வர் தமிழகத்தில் புதிதாக திறக்க இருக்கும் அரசு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவையும், கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவையும் குடியரசுத் தலைவர், அதுவும் ஒரு தலித் பெண் தான் திறந்து வைக்க வேண்டும் என்று கருதி அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று வருகிற 15ம் தேதி குடியரசுத் தலைவர் தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒன்றிய அரசின் ஆட்டம் எல்லாம் வருகிற 2024ம் ஆண்டு வரை மட்டுமே என்றார்.

The post நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை புறக்கணித்தது ஏன்: டி.ஆர்.பாலு எம்.பி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: